by Staff Writer 06-05-2019 | 7:10 PM
Colombo (News 1st) பயங்கரவாதிகள் பயிற்சி பெற்றதாக சந்தேகிக்கப்படும் வீடு ஒன்று நுவரெலியா ப்ளெக்பூல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட சோதனையில் குறித்த இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை, கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களில் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவலுக்கமைய குறித்த வீடு கண்டுபிடிக்கப்பட்டதாக பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா ப்ளேக்பூல் பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்னால் அமைந்து இரண்டு மாடிக் கட்டடத்தை குறுகியகால வாடகையில் பெற்றுக்கொண்டு பயிற்சி முகாம் நடத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.