திறைசேரியின் முன்னாள் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பாணை

திறைசேரியின் முன்னாள் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பாணை

திறைசேரியின் முன்னாள் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பாணை

எழுத்தாளர் Staff Writer

06 May, 2019 | 5:42 pm

Colombo (News 1st) திறைசேரியின் முன்னாள் செயலாளர் பி.பி. ஜயசுந்தர மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரை எதிர்வரும் 13ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுப்பதற்கு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று (6ஆம் திகதி) உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி செயலணியின் முன்னாள் தலைமை அதிகாரி காமினி செனரத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காமினி செனரத்திற்கு பதிலாக இன்று சாட்சியாளர்களின் பட்டியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அதில் ஊழலுக்கு எதிரான குழுவின் பணிப்பாளர் சபையும் உள்ளடங்குகின்றது.

அரசாங்கத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிக நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் காமினி செனரத் உள்ளிட்ட மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் ஷம்பா ஜானகி ராஜரத்ன உள்ளிட்ட மூவரடங்கிய விசேட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்