சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 05-05-2019 | 6:21 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேகநபரான சஹ்ரான் ஹசிமின் மைத்துனர் என கூறப்படும் மௌலவி ரிலா ஷஹ்னவாஜ் எனும் நபர் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். 02. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு 5 நாட்களுக்கு முன்னர் சவுதி அரேபிய வௌிவிவகார அமைச்சினால் இலங்கைக்கான சவுதி தூதரகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 03. உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவித்தாரண தடை ஏற்படுத்தியுள்ளதாக Economic Times அறிக்கையிட்டுள்ளது. 04. கொழும்பு நகருக்குள் பிரவேசிப்பதற்கான முக்கிய பாலத்தை வெடிக்கச்செய்து தகர்ப்பதற்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகப் பரவிவருகின்ற செய்தி தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் பதில். 05. வாள், கூரிய ஆயுதங்கள் மற்றும் இராணுவத்தினர், பொலிஸாரின் சீருடைகளுக்கு ஒப்பான ஆடைகளை வைத்திருந்தால், அவற்றை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 06. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக பாதுகாப்பு என்ற போர்வையில் வட மாகாணத்தில் இராணுவம் தொடர்ந்தும் நிலைகொள்ள அனுமதிக்க முடியாது என சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். 07. பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ், கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். வௌிநாட்டுச் செய்தி 01. தாய்லாந்து மன்னர் மகா வஜிராலங்கோன் தனது பாதுகாப்புப்படை துணை தலைவரான சுதிடா டித்ஜாய் என்பவரை திருமணம் முடித்ததையடுத்து, முடிசூடி அரியணை ஏறியுள்ளார். விளையாட்டுச் செய்தி 01. சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட்டை பல நாடுகளில் பிரபலப்படுத்தும் நோக்கில், தரவரிசைப் பட்டியலில் 80 நாடுகளை, ICC சேர்த்துள்ளது.