IPL Match: ஹைதராபாத் அணி தோல்வி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: ஹைதராபாத் அணி தோல்வி

by Staff Writer 05-05-2019 | 8:21 AM
Colombo (News 1st) ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி தோல்வியைத் தழுவியுள்ளது. பெங்களூரில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களூர் அணித்தலைவர் கோலி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார். இதனையடுத்து, முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டங்களை எடுத்தது. அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 70 ஓட்டங்களை குவித்தார். 176 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியில் சிம்ரன் ஹேட்மர் 75 ஒட்டங்களையும் குர்கீராத் சிங் 65 ஓட்டங்களையும் விளாச பெங்களூரு அணி 4 பந்துகள் எஞ்சிய நிலையில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் ஹைதராபாத் அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இன்று நடைபெறும், மும்பை, கொல்கத்தா அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தின் முடிவை பொருத்தே ஹைதராபாத் அணியின் எதிர்காலம் உள்ளதாகக் கருதப்படுகின்றது.