தாக்குதல் விசாரணைகளுக்கு கபில ஹெந்தாவித்தாரண தடை?

தாக்குதல் விசாரணைகளுக்கு கபில ஹெந்தாவித்தாரண தடை ஏற்படுத்தியதாக Economic Times அறிக்கை

by Staff Writer 04-05-2019 | 9:01 PM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவித்தாரண தடை ஏற்படுத்தியுள்ளதாக Economic Times அறிக்கையிட்டுள்ளது. ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல், சீன பாதுகாப்பு முகவர் நிலையத்துடன் இணைந்து இந்த சதிகார செயலில் ஈடுபட்டுள்ளதுடன் அது தொடர்பான குரல்பதிவின் மூலம் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக Economic Times அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் வெளிநாடுகள் இலங்கைக்கு வந்து செயற்படுவதால் அது நன்மை பயக்காது என சீனா அஞ்சுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அது தனது குரல் தான் என கபில ஹெந்தவித்தாரண நியூஸ்பெஸ்ட்டிற்கு உறுதிப்படுத்தினார் எனினும், அந்தக் குரல்பதிவிற்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை என அவர் வலியுறுத்தினார். அது நான்கு, ஐந்து மாதங்களுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். ஒரு முறை தம்முடன் தொடர்பு கொண்ட ஒருவர் இலங்கையில் அமெரிக்க தொடர்பு நிலையமொன்றை ஆரம்பிப்பது குறித்து வினவியதாகவும் அந்த சந்தர்ப்பத்தில் தம்மிடம் பதில் இருக்கவில்லை எனவும் ஹெந்தாவித்தாரண தெரிவித்தார். அந்தத் தகவல்களை அறிந்த பின்னர் இவ்வாறான பாதுகாப்பு நிலையம் உருவாக்கப்படுகின்றமை தேசப்பற்றாளன் என்ற வகையில் நாட்டின் இறைமைக்கும் தேசியப் பாதுகாப்பிற்கும் பாரிய அச்சுறுத்தல் என தாம் உணர்ந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார். இந்நாட்டின் துறைமுகம், விமான நிலையம் போன்றவற்றை அந்நாடு நிர்வகிக்க வழங்குகின்றமை பாரிய அச்சுறுத்தல் எனவும் அவர் கூறினார். இதேவேளை, இந்த குரல் பதிவு வெளியானதை அடுத்து தன்னுடைய நற்பெயருக்கு பெரும் களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதுபோன்ற தனிப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் வேறு நாடோ அல்லது நிறுவனமோ பெற்றுக்கொள்ளக்கூடியதாய் இருக்கின்றமை சகலருக்கும் எதிர்காலத்தில் பாரியதோர் பிரச்சினையாகும் எனவும் கபில ஹெந்தாவித்தாரண சுட்டிக்காட்டினார்.

ஏனைய செய்திகள்