T20I தரவரிசையில் 80 நாடுகளை இணைத்துள்ள ICC

சர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் 80 நாடுகளை இணைத்துள்ள ICC

by Bella Dalima 04-05-2019 | 5:56 PM
Colombo (News 1st) சர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட்டை பல நாடுகளில் பிரபலப்படுத்தும் நோக்கில், தரவரிசைப் பட்டியலில் 80 நாடுகளை ICC சேர்த்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவை 20 ஓவர் போட்டி அணிகளின் வருடாந்த தரவரிசைப் பட்டியலை நேற்று (03) வௌியிட்டது. இந்த தரவரிசைப் பட்டியலில் 80 நாடுகளை ICC இணைத்துள்ளது. பாகிஸ்தான் 286 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது. தென்னாப்பிரிக்கா 262 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்து 261 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் 3-வது அவுஸ்திரேலியா நான்காவது இடத்திலும் இந்தியா ஐந்தாவது இடத்திலும் உள்ளன. குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக நேபாளம் 11 ஆவது இடத்தில் உள்ளது. சிங்கப்பூர் 23 ஆவது இடத்திலும் டென்மார்க் 24 ஆவது இடத்திலும் அமெரிக்கா 31 ஆவது இடத்திலும் ஸ்பெயின் 41 ஆவது இடத்திலும் ஜப்பான் 53 ஆவது இடத்திலும் அர்ஜென்டினா 56 ஆவது இடத்திலும் பிரேசில் 69 ஆவது இடத்திலும் தரவரிசையில் அங்கம் வகிக்கின்றன. ICC உறுப்பு நாடுகள் விளையாடும் 20 ஓவர் போட்டிக்கும் சர்வதேச அந்தஸ்து வழங்குவதென கடந்த ஆண்டு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்தப் பட்டியலில் இலங்கை 227 புள்ளிகளுடன் 8 ஆவது இடத்தில் உள்ளது.  
Rank Team Points
1 Pakistan 286
2 South Africa 262
3 England 261
4 Australia 261
5 India 260
6 New Zealand 254
7 Afghanistan 241
8 Sri Lanka 227
9 Windies 226
10 Bangladesh 220
11 Nepal 212
12 Scotland 199
13 Zimbabwe 192
14 Netherlands 187
15 Ireland 182
16 UAE 181
17 PNG 172
18 Oman 155
19 Hong Kong 152
20 Namibia 141
21 Qatar 129
22 Saudi Arabia 121
23 Singapore 118
24 Denmark 116
25 Canada 111
26 Jersey 106
27 Kuwait 104
28 Ghana 100
29 Kenya 95
30 Botswana 93
31 USA 84
32 Austria 73
33 Malaysia 73
34 Guernsey 68
35 Uganda 68
36 Germany 64
37 Sweden 58
38 Tanzania 56
39 Nigeria 55
40 Luxembourg 55
41 Spain 53
42 Philippines 48
43 France 45
44 Belize 42
45 Belgium 40
46 Peru 40
47 Bahrain 37
48 Mexico 36
49 Fiji 35
50 Samoa 34
51 Vanuatu 33
52 Panama 32
53 Japan 32
54 Costa Rica 32
55 Thailand 31
56 Argentina 31
57 Hungary 30
58 Mozambique 29
59 Chile 25
60 Malawi 25
61 Israel 25
62 Bhutan 23
63 Finland 22
64 South Korea 22
65 Isle of Man 21
66 Malta 14
67 Bulgaria 14
68 Sierra Leone 12
69 Brazil 12
70 Czech Republic 9
71 St Helena 9
72 Maldives 8
73 Gibraltar 4
74 Myanmar 3
75 Indonesia 0
76 China 0
77 Gambia 0
78 Swaziland 0
79 Rwanda 0
80 Lesotho 0