பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல்

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல்

எழுத்தாளர் Staff Writer

04 May, 2019 | 4:29 pm

Colombo (News 1st) வாள், கூரிய ஆயுதங்கள் மற்றும் இராணுவத்தினர், பொலிஸாரின் சீருடைகளுக்கு ஒப்பான ஆடைகளை வைத்திருந்தால், நாளைய தினத்திற்குள் (05) அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அத்துடன், பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் சீருடைகளை ஒத்த ஆடைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் சீருடைகளுக்கு ஒப்பான ஆடைகளை வைத்திருந்தால், நாளைய தினத்திற்குள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த அறிவிப்பானது கூரிய ஆயுதங்களை வைத்திருப்பதற்கான அனுமதியை பெற்றிருப்பவர்களுக்கு பொருந்தாது எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்