கொழும்பு பேராயருக்கு பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் கடிதம்

கொழும்பு பேராயருக்கு பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் கடிதம்

கொழும்பு பேராயருக்கு பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் கடிதம்

எழுத்தாளர் Staff Writer

04 May, 2019 | 3:57 pm

Colombo (News 1st) பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ், கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

குரோதங்களால் இறுகிய இதயத்தை சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றின் ஊடாக மிருதுவாக்குவதற்கு தலையசைக்கும் காலம் கனியட்டும் என பரிசுத்த பாப்பரசர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து இலங்கையர்களும் சமூக நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்திக்கொள்ள தாம் பிரார்த்திப்பதாகவும் பாப்பரசர் கூறியுள்ளார்.

கடவுளின் பரிசுத்த நாமத்திற்கு எதிராக மிலேச்சத்தனமான தாக்குதல்களை முன்னெடுத்தவர்களுக்கு எதிராக பலமான கண்டனத்தை தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுடன் தாம் உடனிருப்பதாகவும் பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ், கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்