by Staff Writer 04-05-2019 | 3:16 PM
Colombo (News 1st) இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிக மழை வீழ்ச்சி காலி - ஹினிதும பகுதியில் பதிவாகியுள்ளது.
ஹினிதும பகுதியில் 133.2 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மத்திய, சப்ரகமுவ, தென், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் காலி, மாத்தறை, இரத்தினபுரி, மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 75 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு கடற்பிராந்தியங்களில் அவதானத்துடன் செயற்படுமாறு மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வங்காள விரிகுடா கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 100 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதுடன், சில சந்தர்ப்பங்களில் 150 கிலோமீட்டர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.