கம்பளை பாடசாலை வளாகத்தினுள் T56 ரக 200 ரவைகள் கண்டுபிடிப்பு

கம்பளை பாடசாலை வளாகத்தினுள் T56 ரக 200 ரவைகள் கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Staff Writer

04 May, 2019 | 7:45 pm

Colombo (News 1st) கம்பளையிலுள்ள புனித ஜோசப் கல்லூரி வளாகத்தினுள் இருந்து T56 ரக 200 ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நாடெங்கிலும் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கை காரணமாக, இனந்தெரியாத ஒருவர் பாடசாலை வளாகத்தினுள் அவற்றை வீசியிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

பாடசாலை வளாகங்களில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கையின் கீழ், கம்பளை – புனித ஜோசப் கல்லூரி இன்று சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன்போது பாடசாலை வளாக மதில் அருகில் இருந்து, 200 T56 ரக ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்