விசாவிற்கு விண்ணப்பிப்போர் தொடர்பில் விசேட விசாரணை

விசாவிற்கு விண்ணப்பிப்போர் தொடர்பில் விசேட விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஆலோசனை

by Staff Writer 03-05-2019 | 4:01 PM
Colombo (News 1st) விசாவிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தொடர்பில் விசேட விசாரணைகளை முன்னெடுக்குமாறு குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சு தெரிவித்தது. சுற்றுலா விசா வழங்கப்பட்டுள்ள நபர்கள் தொடர்பிலும் பாதுகாப்பு பிரிவினால் சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி குறிப்பிட்டார். இதனை தவிர, பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் நாட்டிற்குள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில், விமான நிலையத்தில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார். குடிவரவு குடியகல்வு பிரிவினர், சர்வதேச பொலிஸாரிடமிருந்து பயங்கரவாதிகள் தொடர்பிலான தரவுகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி மேலும் தெரிவித்தார். இதனால் எவ்வித தடையுமின்றி, சந்தேகநபர்களை அடையாளங்காண்பதற்கு இயலும் எனவும் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சு தெரிவித்தது.