ஜனாதிபதி - எதிர்க்கட்சித் தலைவர் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி - எதிர்க்கட்சித் தலைவர் இடையில் சந்திப்பு

by Staff Writer 03-05-2019 | 3:42 PM
Colombo (News 1st) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலருக்கும் இடையில் நேற்றிரவு (02) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இதேவேளை, உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்பு பிரதானிகள் அடங்கிய குழுவின் அறிக்கை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இதன்போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபகஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்குவதுடன், புலனாய்வுப் பிரிவினை பலமிக்கதாக்க மாற்ற வேண்டும் என முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜயநாத் கொலம்பகே குறிப்பிட்டுள்ளார்.