வெளிநாடுகளில் தொழில்புரிவோருக்காக விசேட செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது

வெளிநாடுகளில் தொழில்புரிவோருக்காக விசேட செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது

வெளிநாடுகளில் தொழில்புரிவோருக்காக விசேட செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது

எழுத்தாளர் Staff Writer

03 May, 2019 | 7:02 pm

Colombo (News 1st) வெளிநாடுகளில் தொழில்புரிவோருக்கான விசேட செயலி (App) ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் வெளிநாடுகளில் தொழில்புரிவோர் தொடர்பான அனைத்து தரவுகளையும் அறிந்துகொள்ள முடியுமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் முன்னணி தொலைத்தொடர்பாடல் நிறுவனமொன்றுடன் இணைந்து, வெளிநாடுகளில் பணியாற்றுவோருக்காக பிரத்தியேக சிம் (Sim) அட்டைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு தொலைபேசி கட்டணத்திற்கு அமைவாகவே, இலங்கையிலுள்ள தமது உறவினர்களுடன் அவர்கள் உரையாட முடியுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்