குண்டுத்தாக்குதல்களால் சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு

குண்டுத் தாக்குதல்களால் சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பு

by Staff Writer 02-05-2019 | 8:48 AM
Colombo (News 1st) கொழும்பிற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த வாரத்திற்குள் 50 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஏனைய பகுதிகளுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் 30 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக, சபையின் தலைவர் கிஷூ கோமஸ் குறிப்பிட்டுள்ளார். கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களினால் சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த வருடத்தில் 2.33 மில்லியன் மக்கள் நாட்டிற்கு வருகைதந்ததுடன், இந்த வருடத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 3 மில்லியனாக அதிகரிப்பதற்கு எதிர்பார்த்திருந்ததாகவும், சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. எனினும், தற்போதையை நிலையில் அந்த இலக்கை அடைவதற்கு இயலாவிட்டாலும், அதனை அடைவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிஷூ கோமஸ் தெரிவித்துள்ளார்.