மெரில்போன் கிரிக்கெட் கழக தவிசாளர் பதவிக்கு சங்கக்காரவின் பெயர் பரிந்துரை

மெரில்போன் கிரிக்கெட் கழக தவிசாளர் பதவிக்கு சங்கக்காரவின் பெயர் பரிந்துரை

மெரில்போன் கிரிக்கெட் கழக தவிசாளர் பதவிக்கு சங்கக்காரவின் பெயர் பரிந்துரை

எழுத்தாளர் Staff Writer

02 May, 2019 | 6:41 am

Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார இங்கிலாந்தின் மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் தவிசாளர் பொறுப்புக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச தகவல்கள் தெரிவித்துள்ளன.

நேற்று (முதலாம் திகதி) நடைபெற்ற மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் வருடாந்த பொதுச்சபை கூட்டத்தில் இது தெரியவந்துள்ளது.

மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் தவிசாளர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நியமிக்கப்படவுள்ளார்.

அந்தப் பொறுப்புக்கு குமார் சங்கக்கார தேர்ந்தெடுக்கப்பட்டால் மெரில்போன் கிரிக்கெட் கழக தவிசாளர் பொறுப்பை ஏற்ற முதலாவது வெளிநாட்டுப் பிரஜை என்ற பெருமை அவரை சாரும்.

கிரிக்கெட் விளையாட்டின் தாயகமாக மெரில்போன் கிரிக்கெட் கழகம் போற்றப்படுவதுடன் வரலாற்று சிறப்புமிக்க லோர்ட்ஸ் மைதானம் அதற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்