மாகந்துரே மதூஷ் நாடு கடத்தப்படுவாரா?: தீர்ப்பு இன்று

மாகந்துரே மதூஷ் நாடு கடத்தப்படுவாரா?: தீர்ப்பு இன்று

மாகந்துரே மதூஷ் நாடு கடத்தப்படுவாரா?: தீர்ப்பு இன்று

எழுத்தாளர் Staff Writer

02 May, 2019 | 1:10 pm

Colombo (News 1st) இலங்கைக்குத் தம்மை நாடு கடத்துமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ஆட்சேபித்து மாகந்துரே மதூஷ் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு இன்று (2ஆம் திகதி) அறிவிக்கப்படவுள்ளது.

குறித்த மனு மீதான விசாரணை கடந்த 18 ஆம் திகதி துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த மனுவில், இலங்கையில் தமக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக மாகந்துரே மதூஷ் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், மாகந்துரே மதூஷுடன் கைது செய்யப்பட்டவர்களில் 30 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மாகந்துரே மதூஷின் உதவியாளரான ‘கஞ்சிப்பானை இம்ரான்’ தொடர்ந்தும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

மேலும், சிலர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்