பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் பதவி நீக்கம்

பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் பதவி நீக்கம்

பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் பதவி நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

02 May, 2019 | 9:03 am

Colombo (News 1st) பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் கவின் வில்லியம்சன் (Gavin Williamson) பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

உயர்மட்ட தேசிய பாதுகாப்புப் பேரவையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள், வௌியானதைத் தொடர்ந்து அவர் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து, குறித்த பதவியை வகிப்பதற்கு கவின் வில்லியம்சனின் இயலுமை மீதான நம்பிக்கையினை பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே இழந்துள்ளதாகவும் அவரைப் பதவியிலிருந்து அகற்றியுள்ளதாகவும் பிரித்தானிய ஊடகமொன்று செய்தி வௌியிட்டுள்ளது.

மேலும், பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் பதவியை பென்னி மோர்டவுண்ட் (Penny Mordaunt) பொறுப்பேற்கவுள்ளதாகவும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் 5G தொடர்பாடல் வலையமைப்பை கட்டமைப்பதற்கான, மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளை ஹுவாவி (Huawei) நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்வது தொடர்பிலான திட்டத்தின் அறிக்கைகள் வௌியாகியமை தொடர்பிலேயே, கவின் வில்லியம்சன் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

தம் மீதான குற்றச்சாட்டுக்களை, 2017 ஆம் ஆண்டிலிருந்து பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளராகக் கடமையாற்றிய கவின் வில்லியம்சன் முற்றாக நிராகரித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்