சியோன் தேவாலய தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

சியோன் தேவாலய தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

02 May, 2019 | 8:20 pm

Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறன்று மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரே இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கணேசலிங்கம் கலாரஞ்சனி தெரிவித்தார்.

பரமேஸ்வரன் ப்ரஸ்டீன் எனும் 26 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய, சியோன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்