கண்டியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 11 பேர் கைது

கண்டியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 11 பேர் கைது

கண்டியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 11 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

02 May, 2019 | 5:28 pm

Colombo (News 1st) கண்டி – வத்தேகம, மடவல தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

மடவல தோட்டத்தில் உள்ள வீடொன்றை சோதனைக்குட்படுத்திய போது, அங்கிருந்து 12 சிறிய கத்திகளும், துப்பாக்கியொன்றும், சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 பெரிய கத்திகளும், கெமரா ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, அளுத்கம தர்கா நகரில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பின் போது பதிவு செய்யப்படாத இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்திருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்