எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தேவாலயங்களில் திருப்பலி ஒப்புக்கொடுப்பதைத் தவிர்க்குமாறு பேராயர் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

02 May, 2019 | 3:43 pm

Colombo (News 1st) எதிர்வரும் 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பிலுள்ள தேவாலயங்களில் திருப்பலி ஒப்புக்கொடுப்பதைத் தவிர்க்குமாறு கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அறிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டு பேராயர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மூன்று தேவாலயங்கள் உள்ளிட்ட 8 இடங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், கடந்த 28 ஆம் திகதி பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் பேராயர் இல்லத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்