முஸ்லிம் மதவிவகார திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

முஸ்லிம் மத விவகார திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

by Staff Writer 01-05-2019 | 9:43 AM
Colombo (News 1st) தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமாத் இ மில்லது இப்ராஹீம் பி செய்லானி அமைப்பு ஆகியவற்றின் செயற்பாடுகளை பள்ளிவாசல்களில் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, முஸ்லிம் மத விவகார திணைக்களம் தெரிவித்துள்ளது. பள்ளிவாசல்களை நிறுவுவதற்கு அனுமதி வழங்கும் வகூப் சபைகளுக்கு இந்த விடயம் தொடர்பில் அறிவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என முஸ்லிம் மத விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஆர்.எம். மலிக் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு புதிதாக வழிப்பாட்டுத் தலங்கள் நிறுவப்பட்டிருப்பின், அவை தொடர்பில் ஒரு வாரத்திற்குள் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு மாவட்ட ரீதியில் செயற்படும் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எதிர்காலத்தில் பள்ளிவாசல்களை நிறுவுவதற்கு அனுமதி வழங்கும்போது நன்கு ஆராய்ந்து அது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் எம்.ஆர்.எம். மலிக் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் சுமார் 2,000 முஸ்லிம் வழிப்பாட்டுத் தலங்கள் முஸ்லிம் மத விவகார திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழிப்பாட்டுத் தலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிகள் குறித்து மீள்பரிசீலனை செய்வதற்குத் தீர்மானித்துள்ளதாக முஸ்லிம் மத விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஆர்.எம். மலிக் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய செய்திகள்