செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 01-05-2019 | 6:23 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், அதில் காணப்படும் விடயங்களை அனைத்து தரப்பினருக்கும் பகிரங்கப்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 02. பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்த சோதனைகளின்போது, உள்ளூர் அரசியல்வாதிகளின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 03. சாய்ந்தமருதில் இடம்பெற்ற வெடிச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் வேன் கெக்கிராவை – இஹல புளியங்குளம் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது. 04. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து தேடப்பட்ட லொறி பொலன்னறுவையில் மீட்கப்பட்டுள்ளது.  05. நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழலைத் துரிதமாக நிவர்த்திசெய்து, நிலைமையை விரைவில் வழமைக்குக் கொண்டுவரும் பொருட்டு தாம் பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜெனரல் ஷாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார். 06. அனைத்துப் பாடசாலைகளிலும் பாதுகாப்புக் குழு ஒன்றை நியமிப்பதற்கு, பாடசாலைகளின் அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 07. கைது செய்யப்பட்ட தாக்குதல்தாரிகளின் மாமாவின் வீட்டிலிருந்து வன்தட்டுகள் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வௌிநாட்டுச் செய்திகள் 01. ஜப்பானிய பேரரசர் அகிஹிட்டோ ( Akihito), நேற்றுடன் ஓய்வு பெற்றுள்ளார். 02. லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்ட அமெரிக்காவின் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 03. அமெரிக்க பிரதி சட்டமா அதிபர் ரொட் ரொசென்ஸ்டெய்ன் (Rod Rosenstein) தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் கையளித்துள்ளார்.