நியூஸ்ஃபெஸ்ட்டின் ''நாடே முதன்மை'' பாடல் வௌியீடு 

by Staff Writer 01-05-2019 | 8:59 PM
Colombo (News 1st) நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ''நாடே முதன்மை'' எனும் பாடலை MTV/MBC ஊடக வலையமைப்பு வெளியிட்டுள்ளது. இனத்தின் அடிப்படையில் பிளவுபடுவதை விடுத்து, கைகோர்த்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் இந்தப் பாடல் மும்மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் வரிகளை சிங்கள மொழியில் நியூஸ்ஃபெஸ்ட் ஆலோசகர் சிட்னி சந்திரசேகரவும் தமிழில் சக்தி தொலைக்காட்சி முகாமையாளர் ஐயாத்துரை கஜமுகனும் எழுதியுள்ளனர். வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டேனியல், பாடல் வரிகளை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இலங்கையின் இளம் கலைஞர் அஷான் பெர்னாண்டோ இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார். இலங்கையின் புகழ்பூத்த கலைஞர்கள் இந்தப் பாடலைப் பாடியுள்ளதுடன், சிரச சுப்பர்ஸ்டார் மற்றும் ஜூனியர் சுப்பர்ஸ்டார் கலைஞர்களும் பாடலுக்கு பங்களிப்பு செய்துள்ளனர். நாடே முதன்மை பாடலை யூ-டீயூப்பிலும் நீங்கள் காணலாம்.