காத்தான்குடியில் சஹ்ரானின் சகோதரி கைது

காத்தான்குடியில் சஹ்ரானின் சகோதரி கைது

எழுத்தாளர் Staff Writer

01 May, 2019 | 9:42 pm

Colombo (News 1st) பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரானின் சகோதரி மட்டக்களப்பு பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 20 இலட்சம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டதன் பின்னணியில், கைது செய்யப்பட்டுள்ளதாக
பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடியிலுள்ள அவரது வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சஹ்ரானின் சகோதரியிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்