மாபலகம தேரர் கொலை: 75 வயதான சந்தேகநபர் கைது

மாபலகம தேரர் கொலை: 75 வயதான சந்தேகநபர் கைது

by Staff Writer 01-05-2019 | 4:14 PM
Colombo (News 1st)  காலி - மாபலகம பகுதியில் தேரர் ஒருவர் கொலையுண்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பௌத்த விகாரையில் தொழிலாளியாக பணியாற்றி வந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வதுரம்ப பகுதியைச் சேர்ந்த 75 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார். மாபலகம வித்தியாதிலக்க பிரிவெனா விகாரையின் விகாராதிபதியாகவிருந்த 70 வயதான மாபலகம குணசிறி எனும் தேரரே கொலை செய்யப்பட்டுள்ளார். பணப்பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.