சர்வதேச தொழிலாளர் தினம் இன்று

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று

எழுத்தாளர் Staff Writer

01 May, 2019 | 6:51 am

Colombo (News 1st) சர்வதேச தொழிலாளர் தினம் இன்றாகும்.

சர்வதேச ரீதியில் 58 வீதமான தொழிலாளர்கள் காணப்படுவதாக சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பின் தரவுகளூடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 71 வீதமானவர்கள் ஆண்களாவர்.

இதேவேளை, இலங்கையில் உள்ள மொத்த சனத்தொகையில் 50.2 வீதமான தொழிலாளர்கள் காணப்படுவதுடன், அவர்களில் 32.4 வீதமானவர்கள் பெண்கள் என சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

8 மணித்தியால பணிநேரம் என்ற அடிப்படைக் கோட்பாட்டை வலியுறுத்தும் வகையில் சர்வதேச தொழிலாளர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் நிலைமையை கருத்தில்கொண்டு இந்த வருடம் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவதை அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் இரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்