கேகாலையில் 79 வௌிநாட்டு கடவுச்சீட்டுகளுடன் பெண் கைது

கேகாலையில் 79 வௌிநாட்டு கடவுச்சீட்டுகளுடன் பெண் கைது

கேகாலையில் 79 வௌிநாட்டு கடவுச்சீட்டுகளுடன் பெண் கைது

எழுத்தாளர் Staff Writer

01 May, 2019 | 4:00 pm

Colombo (News 1st) கேகாலையில் பெண் ஒருவர் 79 வௌிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் 5 சர்வதேச வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, எஹலியகொட பகுதியில் மறைந்திருந்த போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

வௌிநாடுகளில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி பல்வேறு பகுதிகளில் உள்ளோரிடம் இலட்சக்கணக்கான பணத்தை குறித்த பெண் மோசடி செய்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

குறித்த பெண்ணுக்கு எதிராக பல பகுதிகளிலுள்ள நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள பெண்ணை கேகாலை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்