கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட வேலைத்திட்டம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட வேலைத்திட்டம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட வேலைத்திட்டம்

எழுத்தாளர் Staff Writer

01 May, 2019 | 7:24 am

Colombo (News 1st) சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நாட்டிற்கு வருவதைத் தடுப்பதற்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சர்வதேச பொலிஸாரின் தரவுகளுக்கு அமைய, சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கான விசேட மென்பொருள் அடங்கிய கணினு கட்டமைப்புகள் விமான நிலையத்தின் அனைத்து கருமபீடங்களிலும் பொருத்தப்பட்டுள்ளதாக, குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் பசன் ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டிலிருந்து வௌியேறும் நபர்கள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி நாட்டில் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமாக தாக்குதல்களின் பின்னர், விமான நிலையத்தில் முன்னெடுக்கக்கூடிய பாதுகாப்பு செயற்றிட்டங்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக, குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் பசன் ரத்னாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்