எதிர்வரும் மூன்று தினங்களுக்கு 150 மில்லிமீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்

எதிர்வரும் மூன்று தினங்களுக்கு 150 மில்லிமீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்

எதிர்வரும் மூன்று தினங்களுக்கு 150 மில்லிமீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்

எழுத்தாளர் Staff Writer

01 May, 2019 | 5:28 pm

Colombo (News 1st) Fani சூறாவளி காரணமாக எதிர்வரும் மூன்று தினங்களுக்கு ஊவா , சப்ரகமுவ , வட மேல் , தென்  மற்றும் மேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் 100 தொடக்கம் 150 மில்லிமீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய மாகாணங்களில் 50 தொடக்கம் 100 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மீள அறிவிக்கப்படும் வரை கடற்றொழில் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு, வட கிழக்கு, தென், வடமேல் ஆகிய கடற்பகுதிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்