தாக்குதல் தொடர்பான விசேட குழுவின் அறிக்கை கிடைத்ததும் பகிரங்கப்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

by Bella Dalima 30-04-2019 | 9:06 PM
Colombo (News 1st) பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசேட குழுவின் அறிக்கை தனக்கு கிடைத்தவுடன், அதில் காணப்படும் விடயங்களை அனைத்து தரப்பினருக்கும் பகிரங்கப்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்து, அதனூடாக அடுத்தகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இரண்டு வாரங்களுக்குள் விசாரணை அறிக்கையைக் கோரியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். புதிய பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட இன்று தனது கடமைகளை பொறுப்பேற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக நாட்டின் எவ்வித நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடையாதிருப்பதற்கும், அனைத்து செயற்பாடுகளையும் வழமைபோன்று முன்னெடுக்கவும் இதன்போது ஜனாதிபதி வலியுறுத்தியதா ஜனாதிபதி ஊகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஏனைய செய்திகள்