அமெரிக்காவின் பிரதி சட்டமா அதிபர் இராஜினாமா

அமெரிக்காவின் பிரதி சட்டமா அதிபர் இராஜினாமா

by Chandrasekaram Chandravadani 30-04-2019 | 8:03 AM
Colombo (News 1st) அமெரிக்க பிரதி சட்டமா அதிபர் ரொட் ரொசென்ஸ்டெய்ன் (Rod Rosenstein) தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் கையளித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதித் ​தேர்தலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ரஷ்யாவின் தலையீடு குறித்து ஆராய்வதற்கான விசேட ஆணைக்குழுவின் தலைவராக ரொபர்ட் முல்லரை 2017 ஆம் ஆண்டில் ரொட் ரொசென்ஸ்டெய்ன் நியமித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, ட்ரம்ப் மற்றும் ரொட் ரொசென்ஸ்டெய்னுக்கு இடையில் மோசமானதொரு உறவு தொடர்வதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. நம்பகமான ஆதாரங்கள் கட்சி சாராதவை என்ற அடிப்படையில் தாம் எவ்வித அச்சமுமின்றி சட்டத்தை நடைமுறைப்படுத்தியதாக அவர் தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, ரொட் ரொசென்ஸ்டெய்ன் எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதி பதவியிலிருந்து விலகவுள்ளார். சட்டமா அதிபராக வில்லியம் பார் (William Barr) என்பவர் நியமிக்கப்பட்ட நிலையில், ரொசென்ஸ்டெய்ன் கடந்த மார்ச் மாதத்திலேயே பதவி விலகுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. ட்ரம்பின் ஜனாதிபதி பதவிக்கு சவால் விடுத்த குறித்த விசாரணைக் குழுவின் கண்டறிதல்களை பொதுமக்களுக்கு அறிவிக்கும் வரையில் அவர் பதவியில் நீடிக்க முயற்சித்ததாகவும் கூறப்படுகின்றது.