சமூகவலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்

சமூகவலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்

சமூகவலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

30 Apr, 2019 | 10:52 am

Colombo (News 1st) பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை இன்று (30ஆம் திகதி) முற்பகலுடன் நீக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கிய ஆலோசனைக்கு அமைய, இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, வட்ஸ்அப், வைபர் மற்றும் ‍பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

தடை நீக்கப்பட்டபோதிலும், நாட்டின் நிலைமையை கருதி சமூக வலைத்தளங்களை மிகவும் பொறுப்புடன் கையாள வேண்டும் எனவும் பயனாளர்களிடம் கோரப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்