NTJஇன் அமைப்பாளரிடம் 72 மணிநேர விசாரணை

NTJ இன் கொழும்பு மாவட்ட அமைப்பாளரை 72 மணிநேரம் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

by Staff Writer 29-04-2019 | 3:51 PM
Colombo(News 1st) தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரான மொஹமட் பாரூக் மொஹமட் பவாஸ் என்பவரை 72 மணித்தியாலங்கள், வாழைத்தோட்டம் பொலிஸில் தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன, மேல் மாகாண புலனாய்வுப் பிரிவிற்கு இன்று இந்த அனுமதியை வழங்கியுள்ளார். 72 மணித்தியாலங்களின் பின்னர், சந்தேகநபரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்ட நீதவான், வழக்கை எதிர்வரும் 2ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார். நேற்றிரவு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து, தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்காக வைக்கப்பட்டிருந்த 67 ஸ்டிக்கர்கள் கைப்பற்றப்பட்டதாகவும் குறித்த சந்தேகநபர் அவற்றை இஸ்லாமிய தீவிரவாத அமைப்பின் பிரசார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதேவேளை, சந்தேகநபர் வசமிருந்த கையடக்கத் தொலைபேசியில் கடந்த 21 ஆம் திகதி நாட்டின் பல பகுதிகளிலும் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பிலான காணொளிகள் மற்றும் தற்கொலைக் குண்டுதாரிகள் பயன்படுத்திய வாகனங்களின் புகைப்படங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஏனைய செய்திகள்