by Staff Writer 29-04-2019 | 8:29 PM
Colombo(News 1st) பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஸ ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முழுமையான புலனாய்வுத் தகவல்களை அறிந்திருந்த பொலிஸ்மா அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர், அதனை நடைமுறைப்படுத்துவதிலிருந்து தவறி கவனயீனமாக செயற்பட்டுள்ளமை தொடர்பில், 6 பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக விஜேதாச ராஜபக்ஸ கூறியுள்ளார்.
பொலிஸ் நிவாரணப் பணிமனை, கொட்டாஞ்சேனை, கொள்ளுப்பிட்டி, கோட்டை, கட்டான மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையங்களில், பாராளுமன்ற உறுப்பினர் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டிற்கமைய, சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு விஜேதாச ராஜபக்ஸ ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.