ஊரடங்கு சட்டம் தளர்கிறது

ஊரடங்கு தளர்கிறது - கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவளக்கடைக்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது

by Fazlullah Mubarak 29-04-2019 | 9:06 AM

கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவளக்கடை பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

கல்முனை - சம்மாந்துறை மற்றும் சவளக்கடை பொலிஸ் பிரிவுகளில் கடந்த 26 ஆம் திகதி இரவு முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நேற்று காலை 10 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டது. எனினும், நேற்று மாலை 5 மணி தொடக்கம் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில், காலை 8 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். கடந்த 26 ஆம் திகதி கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் திகதி முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில், ஆயுததாரிகளுக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது. தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் அங்கிகள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலுக்கமைய குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தபோதே துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது. இதனையடுத்து, சந்தேகத்திற்கிடமான வீட்டில் வெடிச்சம்பவம் இடம்பெற்றதுடன், குறித்த வீட்டிலிருந்து வீட்டியிலிருந்து, 3 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 6 சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் இந்த வீட்டில் இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வீட்டிற்குள் காயமடைந்த நிலையில் காணப்பட்ட பெண்ணொருவர் மற்றும் சிறுவனொருவனை பாதுகாப்புத் தரப்பினர் மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.