இந்திய தேர்தல்: நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று

இந்திய மக்களவைத் தேர்தல்: நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று

by Staff Writer 29-04-2019 | 9:13 AM

Colombo (News 1st) இந்திய மக்களவைத் தேர்தலில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு (29ஆம் திகதி) ஆரம்பமாகியுள்ளது.

முதல் 3 கட்டங்களில் வாக்குப்பதிவுகள் ஏற்கனவே நடைபெற்ற நிலையில், இன்று நான்காம் கட்ட வாக்குப்பதிவு இடம்பெறுகின்றது. 9 மாநிலங்களிலுள்ள 72 மக்களவைத் தொகுதிகளிலும் இன்று பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் தேர்தல் நடைபெறுகின்றது. மக்களவைக்கு முதற்கட்டமாக கடந்த 11 ஆம் திகதி 91 தொகுதிகளுக்கும் 2 ஆவது கட்டமாக கடந்த 18 ஆம் திகதி 95 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. மூன்றாவது கட்டமாக 116 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் 17 தொகுதிகள், ராஜஸ்தான், உத்தரபிரதேஷில் தலா 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், மத்திய பிரதேஷ், ஒடிசாவில் தலா 6 தொகுதிகளிலும் இன்று தேர்தல் நடைபெறுகின்றது. இதில் ராஜஸ்தான், மத்திய பிரதேஷ் மாநிலங்களில் 2014 ஆம் ஆண்டு பாரதீய ஜனதாக்கட்சி 54 ஆசனங்களை கைப்பற்றியிருந்தது. இந்தத் தடவை காங்கிரஸ் கட்சிக்கும் பாரதீய ஜனதாக்கட்சிக்கும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த இரு மாநிலங்களிலும் தற்போது காங்கிரஸ் ஆட்சி புரிகின்றமை குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் 72 தொகுதிகளில் 961 வேட்பாளல்கள் போட்டியிடுவதுடன் 1279 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.