போலி ஆவணம் தயாரிக்கும் இடம் சுற்றிவளைப்பு

மாத்தளையில் போலி ஆவணம் தயாரிக்கும் இடம் சுற்றிவளைப்பு

by Staff Writer 28-04-2019 | 1:35 PM
Colombo (News 1st) மாத்தளை - உக்குவெல பகுதியில் போலி ஆவணங்களைத் தயாரிக்கும் பகுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு, சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியிலிருந்து கடவுச்சீட்டுகள், தேசிய அடையாள அட்டைகள், வாள்கள், யானை வெடிகள், துப்பாக்கி ரவைகள், பல்வேறு நிறுவனங்களின் பெயர்களைக் கொண்ட இறப்பர் முத்திரைகள், சிம் அட்டைகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. இதனைத்தவிர, 153 பேரின் நிழற்படங்களும் அங்கிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உக்குவெல பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.