இலங்கை-பாகிஸ்தான் இளையோர் கிரிக்கெட் தொடர் இரத்து

இலங்கை - பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்

by Staff Writer 28-04-2019 | 1:28 PM
Colombo (News 1st) நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடனான போட்டித் தொடரை காலவரையறையின்றி பிற்போடுவதற்கு, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகவிருந்தது. இதில் பங்கேற்பதற்காக 19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நாளை மறுதினம் நாட்டிற்கு வருகை தரவிருந்தமை குறிப்பிடத்தக்கது.