ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2019 | 8:21 am

Colombo (News 1st) ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தனது ஐந்தாவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

12ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற 45ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ரோயல்ஸும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களை பெற்றது.

மனிஷ் பாண்டே 61 ஓட்டங்களை அணிசார்பில் அதிக பட்ச ஓட்டங்களாக குவித்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது.

இதேவேளை, சஞ்சு சம்சன் 48 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்