கரையைக் கடக்கவுள்ள ஃபானி புயல்

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல் 30 ஆம் திகதி கரையைக் கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

by Staff Writer 27-04-2019 | 4:51 PM
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல் 30 ஆம் திகதி கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று (26) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டது. இது புயலாக மாறி கடலோரப் பகுதிகளைத் தாக்க வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனிடையே, தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாகவும் இன்னும் 12 மணித்தியாலங்களில் ஃபானி புயலாக மாறும் எனவும் இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.