இலங்கைக்குத் தேவையான அதிகபட்ச உதவியை வழங்கத் தயார்

இலங்கைக்குத் தேவையான அதிகபட்ச உதவியை வழங்கத் தயார் - மாலைதீவு ஜனாதிபதி

by Staff Writer 27-04-2019 | 7:58 AM
Colombo (News 1st) பயங்கரவாத செயற்பாடுகளை இல்லாதொழிப்பதற்கு இலங்கைக்குத் தேவையான அதிகபட்ச உதவியை வழங்குவதற்குத் தயார் என, மாலைதீவின் ஜனாதிபதி இப்றாஹிம் மொஹமட் சோலி (Ibrahim Mohamed Solih) தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் கலந்துரையாடியபோதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் இடம்பெற்ற மிலேச்சதனதான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சகோதர நாடு என்ற வகையில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கையுடன் கைகோர்த்து செயற்படுவதற்குத் தயார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கடற்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு தமது அனுதாபங்களை தெரிவித்துள்ள மாலைதீவு ஜனாதிபதி, காயமடைந்துள்ளவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்