இரண்டு இஸ்லாமிய அமைப்புகளைத் தடை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை

by Bella Dalima 27-04-2019 | 8:02 PM
Colombo (News 1st) NTJ எனப்படும் தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் JMI எனப்படும் ஜமாத்தே மில்லது இப்ராஹிம் ஆகிய இஸ்லாமிய அமைப்புகளை இலங்கைக்குள் தடை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி என்ற ரீதியில், 2019 (1)  இலக்க  அவசரநிலை சட்டத்தின் கீழுள்ள அதிகாரங்களுக்கு அமைய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். அதற்கமைய, அந்த அமைப்புகளுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும், அதன் செயற்பாடுகளையும் இரத்து செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நாட்டில் செயற்படும் ஏனைய பிரிவினைவாத அமைப்புகளின் செயற்பாடுகளும் அவசரநிலை சட்டத்தின் கீழ் தடை செய்யப்படவுள்ளன.