ரோஹிங்யா மக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தல்

ரோஹிங்யா மக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தல்

ரோஹிங்யா மக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

27 Apr, 2019 | 1:28 pm

Colombo (News 1st) ரோஹிங்யா அகதிகளை சர்வதேச சமூகம் மறந்துவிடக் கூடாது என, ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

மியன்மாரில் இடம்பெற்ற வன்முறையை அடுத்து, சுமார் 1.2 மில்லியன் ரோஹிங்யா மக்கள் அகதிகள் பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், தஞ்சமடைந்துள்ள ரோஹிங்யா அகதிகளுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இவர்களுக்கான தேவைகளை பூர்த்திசெய்வதற்கு பில்லியன் டொலர் தேவைப்படுவதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.

மியன்மாரின் ராக்கின் மாகாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களினால், பலர் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்