புலனாய்வுத்துறையை அரசாங்கம் நலிவுறச் செய்ததே தாக்குதலுக்கு காரணம்: கோட்டாபய தெரிவிப்பு

புலனாய்வுத்துறையை அரசாங்கம் நலிவுறச் செய்ததே தாக்குதலுக்கு காரணம்: கோட்டாபய தெரிவிப்பு

புலனாய்வுத்துறையை அரசாங்கம் நலிவுறச் செய்ததே தாக்குதலுக்கு காரணம்: கோட்டாபய தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

27 Apr, 2019 | 10:02 pm

Colombo (News 1st) இந்த வருடத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தாம் களமிறங்கவுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ரொய்ட்டர் செய்திச்சேவைக்கு அளித்துள்ள செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ செவ்வியில் தெரிவித்துள்ள கருத்துக்களின் பிரகாரம், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்நிற்பதற்கான பிரதான காரணியாக கடும்போக்கு சிந்தனைகள் பரவுவதைத் தவிர்த்தல், அத்துடன் புலனாய்வுத் துறையை சக்திமிக்கதாய் மாற்றுதல் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.

யுத்த சமயத்தின் போது தாம் கட்டியெழுப்பிய புலனாய்வுத்துறையை சமகால அரசாங்கம் பதவிக்கு வந்ததையடுத்து நலிவுறச் செய்திராவிடின் கடந்த தினத்தில் இடம்பெற்ற தாக்குதல்களைத் தடுத்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமைக்கு அரசாங்கம் தயாரில்லாமலிருந்தமையை அதற்குப் பின்னரான நடவடிக்கைகளில் காண முடிகின்றதாக அவர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்