தேடப்பட்டு வந்த 4 வாகனங்கள் இதுவரை கண்டுபிடிப்பு

தேடப்பட்டு வந்த 4 வாகனங்கள் இதுவரை கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Staff Writer

27 Apr, 2019 | 7:04 pm

Colombo (News 1st) பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நான்கு வாகனங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தெஹிவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, தெஹிவளை சரணங்கர வீதியில் அமைந்துள்ள வீடொன்று நேற்று (26) மாலை பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதன்போது சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

US – 3740 இலக்கத்தகட்டை உடைய ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளானது பொலிஸாரினால் ஏற்கனவே தேடப்பட்டுவந்த வாகனமாகும்.

ஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டு உயிரிழந்தவரின் பெயரில் இந்த மோட்டார் சைக்கிள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிளின் தற்போதைய உரிமையாளரும் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி வத்தளை நாயக்கந்த பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டது.

WP-DAE 4197 இலக்கத்தகடுடைய குறித்த லொறியும் பொலிஸாரால் தேடப்பட்டுவந்த வாகனமாகும்.

இந்த வாகனமும் ஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டு உயிரிழந்தவரின் பெயரில் பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த 24 ஆம் திகதி வறக்காப்பொல – அங்குருவெல்ல பகுதியிலுள்ள வீடொன்றை சோதனைக்குட்படுத்திய சந்தர்ப்பத்தில் அங்கிருந்து பொலிஸாரால் தேடப்பட்டு வந்த வேன் ஒன்றும்​ மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டிருந்தது.

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த வாகனங்களில் நான்கு வாகனங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

1. DAE – 4197 இலக்கத்தகடுடைய லொறி
2. PH – 3779 இலக்கத்தகடுடைய வேன்
3. 144 – 2644 இலக்கத்தகடுடைய மோட்டார் சைக்கிள்
4. US – 3740 இலக்கத்தகடுடைய ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிள்

ஆகியன பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

BYC – 2183 , PVC – 7783 , VC – 4843 , மற்றும் BMD – 0596 ஆகிய இலக்கத்தகடுகளுடைய மோட்டார் சைக்கிள்கள் தேடப்பட்டு வருகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்