5000m ஓட்டத்தில் முதலிடம் பிடித்தார் சிமென்யா

5000 மீட்டர் ஓட்டத்தில் முதலிடத்தைப் பிடித்தார் காஸ்டர் சிமென்யா

by Bella Dalima 26-04-2019 | 6:47 PM
800 மீட்டர் ஓட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான காஸ்டர் சிமென்யா (Caster Semenya) தென் ஆபிரிக்க மெய்வல்லுநர் போட்டிகளில் 5000 மீட்டர் ஓட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். போட்டியை 16 நிமிடங்கள் 5.97 விநாடிகளில் கடந்து அவர் முதலிடத்தைப் பிடித்தார். ஆணா அல்லது பெண்ணா எனும் சந்தேகத்திற்குள்ளான காஸ்டர் சிமென்யா தொடர்பாக சர்வதேச விளையாட்டு வீரர்களைப் பாதுகாக்கும் நீதிமன்றில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவரது உடலில் ஆணுக்குரிய ஹார்மோன்கள் அதிகளவில் சுரப்பதால் அவர் இந்த சர்ச்சைக்குரிய நிலையை எதிர்கொண்டுள்ளார். ஆற்றலை மேம்படுத்த தாம் உட்கொண்ட மருந்து காரணமாக தன்னுடைய உடலில் அவ்வாறான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக காஸ்டர் சிமென்யா கூறியுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் கட்டாரில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் மெய்வல்லுநர் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.