by Staff Writer 26-04-2019 | 5:47 PM
புலமைசார் சொத்துக்களைத் திருடிய நாடுகளின் கறுப்புப் பட்டியலில் சீனா தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளதுடன், இந்தியா இரண்டாமிடத்திலுள்ளது.
காப்புரிமை, பதிப்புரிமை, வர்த்தக இரகசியங்கள் மற்றும் அமுலாக்கங்கள் ஆகியவற்றில் போதுமான அளவிடக்கூடிய முன்னேற்றங்கள் இல்லாதமையினால், இந்தியா இந்த பட்டியலில் இரண்டாமிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கறுப்புப்பட்டியல் அமெரிக்காவால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இதில் 11 நாடுகள் இடம்பிடித்துள்ளன.
புலமைசார் சொத்துக்களை திருடிய நாடுகளின் கறுப்புப் பட்டியலில் சீனாவைத் தொடர்ந்து ஆர்ஜென்டினா, சிலி, வெனிசுவேலா, அல்ஜீரியா, இந்தியா, இந்தோனேசியா, குவைத், ரஷ்யா, சவுதி அரேபியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.
"Special 301" வருடாந்த அறிக்கை - 2018 இல் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதனூடாக தமது புலமைசார் சொத்துக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென தாம் நம்புவதாகவும் அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.
IP முகவரிகளைப் பயன்படுத்தும் வௌிநாட்டு வர்த்தக பங்காளர்களின் புலமைசார் சொத்துக்களே அதிகளவில் திருடப்படுவதாகவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.