பாதுகாப்பு அமைச்சிற்கு பதில் செயலாளர் நியமனம்

பாதுகாப்பு அமைச்சின் பதில் செயலாளராக துசித பி. வணிகசிங்க நியமனம்

by Staff Writer 26-04-2019 | 4:31 PM
Colombo (News 1st) சிரேஷ்ட நிர்வாக அதிகாரியான துசித பி. வணிகசிங்க பாதுகாப்பு அமைச்சின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக அவர் இதுவரை கடமையாற்றி வந்தார். களனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான துசித பி. வணிகசிங்க 1991 ஆம் ஆண்டு இலங்கை பொது நிர்வாக சேவையில் இணைந்தார். நாட்டின் பல பகுதிகளில் பிரதேச செயலாளராக சேவையாற்றிய அவர், கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் மேலதிக செயலாளராகவும் துசித பி. வணிகசிங்க கடமையாற்றியுள்ளார்.