போலியான தகவல்களை வௌியிட்டால் சட்ட நடவடிக்கை

உண்மைக்கு புறம்பான தகவல்களை வௌியிடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

by Bella Dalima 26-04-2019 | 3:28 PM
Colombo (News 1st) நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்களை வௌியிடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பாதுகாப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இணையத்தளம், பேஸ்புக், வட்ஸப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புவோர் தொடர்பில் பாதுகாப்புப் பிரிவு கவனம் செலுத்தியுள்ளதாக தேசிய ஊடக மத்திய நிலையம் அறிக்கையூடாக சுட்டிக்காட்டியுள்ளது. அவசரகால சட்டத்தின் பிரகாரம், வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்பதுடன், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் 3 முதல் 5 வருடங்களுக்கு சிறைத்தண்டனை வழங்க முடியும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவிடுவதைத் தவிர்க்குமாறு தேசிய ஊடக மத்திய நிலையம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

ஏனைய செய்திகள்