பிரதம நீதியரசராக ஜயந்த ஜயசூரிய: அரசியலமைப்பு பேரவை

புதிய பிரதம நீதியரசராக ஜயந்த ஜயசூரிய​வை நியமிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதி

by Staff Writer 26-04-2019 | 11:41 AM
புதிய பிரதம நீதியரசராக சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று கூடிய அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக இந்த தீர்மானத்தை எடுத்ததாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்தார். புதிய கணக்காய்வாளர் நாயகமாக சூலா விக்மரத்னவை நியமிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியதாகவும் நீல் இத்தவெல குறிப்பிட்டார்.